Sunday, 27 January 2013

விழிப்புணர்வுப் பணி


செயல் முறைகள்
விழிப்புணர்வு பணிஎன்பது பல்வேறு கட்டங்களில் செய்யப்படவேண்டிய பணி 
பல்வேறு வகைகளில் மக்கள் கவனத்தில் எந்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த விரும்புகிறோமோ அதற்கான செயல்முறைகளை நன்கு திட்டமிட்டு முன் கூட்டி தயாரிப்புகள் செய்து கொண்டு படிப்படியாக இயங்கவேண்டும்.
முதலில் அந்தச்  செயல் முறைகள் குறித்து அறிந்துகொள்வோம் 
* சுவர் விளம்பரம் எழுதுதல்    
* சுவரொட்டிகள் வெளியிடல்
* துண்டுப் பிரசுரங்கள் வெளியிடல்   
*  டோர் சிலிப் (வீட்டுக்கு வீடு தரும் துண்டுப்பிரசுரங்கள்)வெளியிடல்
*  வாசகங்கள் அடங்கிய வெளியீடுகளைத் தயாரித்து வெளியிடல்
* சிறு புத்தகங்கள் வெளியிடல்/ பேனர் கட்டுதல்
*  செய்தி கோவை வெளியிடல்    
*  விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துதல்
* விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல்(இதில் சைக்கிள் ஊர்வலம் அடங்கும்) 
*  நடைப்  பயணங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்
* விளம்பர அட்டைகள் பயன்படுத்துதல்
*  தெருமுறைப் பிரச்சாரம் செய்தல் பயிற்சி அளித்தல் 
*  கண்காட்சி அமைத்து நடத்திடல்    
*  போட்டிகள் அமைத்து நடத்திடல்
*  படக்காட்சிகள் அமைத்து நடத்திடல்
*அரசால் இதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள மையங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து அல்லது அவர்களிடம் செய்திகளைச் சேகரித்து வழங்குதல் / இணைந்து பணியாற்றுதல்
*  மாநில / மத்திய அளவில் உள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்
*  இப்பணியில் உள்ள அமைப்புகளைப் பற்றியும் அதன் பணிகளைப் பற்றியும் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் அறிவிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்


தொண்டு நிறுவனங்களின் பணிகள்

விழிப்புணர்வுப் பணியை ஆர்வத்துடன் நடத்தும் பொறுப்பும் திறனும் தொண்டு நிறுவனங்களுக்கே மிகுதி.அவை ஆற்றவேண்டிய வழிமுறைகள் பற்பல.அவற்றைப்பற்றிய விவரமான பட்டியல் வருமாறு. 
* பொது அரங்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டிகள், கூட்டங்கள் நடத்துதல்
* பட்டிமன்றம்  
*  கட்டுரைப் போட்டி  
* பேச்சுப் போட்டி  
*  கலை விழா
*  நாடகம் நடத்தல் 
 * வாசகம் எழுதிடல் போட்டி  
*  கவிதைப் போட்டி
*  பாடல் போட்டி  
*  விநாடி வினா போட்டி 
*  விளையாட்டுப் போட்டி
*  கண்காட்சி அமைத்து நடத்திடல் 
 *  சிறப்பு பயிற்சி
*  படக்காட்சி அமைத்து நடத்திடல் 
*   சுற்றுலா
*  செயலரங்கு, பணிமனைகள், பட்டறைகள்
*  கருத்தரங்கம் பயிற்சிகள் அமைத்து நடத்திடல்
*  செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தல்
* முக்கிய இடங்களில் கருத்து விளக்கத்துடன் கூடிய சுவர் தட்டி வைத்தல்
*  கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திடல்
*குறிப்பிட்ட நாளைச் சிறப்பிக்கும் வகையில் களப்பணிகளை மேற்கொள்ளுதல்
*உள்ளூர் கேபிள் டி.வி.க்களில் விளம்பரம் செய்திடல் / படக்காட்சி ஒளிபரப்புதல்
*  பேனர்களை முக்கிய இடங்களில் கட்டி விளம்பரப் படுத்துதல்
* சைக்கிள் பயணம் மருத்துவ முகாம் நடத்திடல்
*  ஆட்டோ / வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி விளம்பரப்படுத்திடல்
* முன்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுதல் 
 * உறுதிமொழி ஏற்பு
* வீடியோ படக்காட்சி கருத்துள்ள திரைப்படம் காண்பித்தல் (16MM/ 35MM)
* வானொலி மூலம் தகவல் ஒலிபரப்பிட ஏற்பாடு செய்தல்
*  வீடுதோறும் ஸ்டிக்கர் ஒட்டுதல் 
*  தெருமுனைப் பிரச்சாரம் செய்தல்
*  சுயஉதவிக் குழு / இளைஞர்மன்றக் கூட்டங்களில் கருத்துப் பகிர்வு
* அனுபவம் பகிர்தல் / உண்மைச் சம்பவம் பகிர்தல்
* சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கௌரவித்தல்
* வளர்ச்சித் துறை / சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்தாளருடன் உரையாடல் அல்லது கேள்வி பதில் மூலமாகப் பங்கேற்பாளர்கள் கருத்து தெளிவுபெற வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திடல்
*தொலைக்காட்சி / வானொலி மூலம் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி / ஒலிபரப்பிடக் கேட்டுக்கொள்ளுதல்
* அழைப்பிதழ் அச்சடித்தல் 
*உள்ளூர், பஞ்சாயத்து, வட்டார, ஒன்றிய, மாநில அளவிலான செயல்பாடுகளை அமைத்து நடத்திடல்
* துண்டு பிரசுரங்களை அச்சிட்டு, செய்தித்தாள்களுடன் இணைத்து வழங்கிடச் செய்திடல்
* சிறப்புக் கட்டுரைகளை எழுதி, செய்தித்தாள், வார / மாத இதழ்களில் வெளிவர ஏற்பாடு செய்திடல்
* பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தி விளக்குதல், பத்திரிகைகளில் செய்திகள் வெளிவர ஏற்பாடு செய்தல்
*  இலவசமாகப் பொருள்களை வழங்குதல்
*தேவை அடிப்படையில் சம்பந்தப்பட்ட செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தல்
*  பொருள்கள் விற்பனை முகாம் அமைத்து நடத்திடல்
* சமூகப் பணி செய்தல்  எ கல்வியறிவு அளித்தல்
*  அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருதல் / மேம்படுத்திடல்
*  நிறுவனங்களில் பணியாளர்களுக்குப் பயிற்சி தருதல்
*  உறுதிமொழி ஏற்பு  எ மனிதச் சங்கிலி  எ தெருமுனைப் பிரச்சாரம்
* வீதி நாடகம் / கலை நிகழ்ச்சிகள் / பொம்மலாட்டம்



No comments:

Post a Comment