Sunday 27 January 2013

விழிப்புணர்வுப் பணி


செயல் முறைகள்
விழிப்புணர்வு பணிஎன்பது பல்வேறு கட்டங்களில் செய்யப்படவேண்டிய பணி 
பல்வேறு வகைகளில் மக்கள் கவனத்தில் எந்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த விரும்புகிறோமோ அதற்கான செயல்முறைகளை நன்கு திட்டமிட்டு முன் கூட்டி தயாரிப்புகள் செய்து கொண்டு படிப்படியாக இயங்கவேண்டும்.
முதலில் அந்தச்  செயல் முறைகள் குறித்து அறிந்துகொள்வோம் 
* சுவர் விளம்பரம் எழுதுதல்    
* சுவரொட்டிகள் வெளியிடல்
* துண்டுப் பிரசுரங்கள் வெளியிடல்   
*  டோர் சிலிப் (வீட்டுக்கு வீடு தரும் துண்டுப்பிரசுரங்கள்)வெளியிடல்
*  வாசகங்கள் அடங்கிய வெளியீடுகளைத் தயாரித்து வெளியிடல்
* சிறு புத்தகங்கள் வெளியிடல்/ பேனர் கட்டுதல்
*  செய்தி கோவை வெளியிடல்    
*  விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துதல்
* விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல்(இதில் சைக்கிள் ஊர்வலம் அடங்கும்) 
*  நடைப்  பயணங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்
* விளம்பர அட்டைகள் பயன்படுத்துதல்
*  தெருமுறைப் பிரச்சாரம் செய்தல் பயிற்சி அளித்தல் 
*  கண்காட்சி அமைத்து நடத்திடல்    
*  போட்டிகள் அமைத்து நடத்திடல்
*  படக்காட்சிகள் அமைத்து நடத்திடல்
*அரசால் இதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள மையங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து அல்லது அவர்களிடம் செய்திகளைச் சேகரித்து வழங்குதல் / இணைந்து பணியாற்றுதல்
*  மாநில / மத்திய அளவில் உள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்
*  இப்பணியில் உள்ள அமைப்புகளைப் பற்றியும் அதன் பணிகளைப் பற்றியும் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் அறிவிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்


தொண்டு நிறுவனங்களின் பணிகள்

விழிப்புணர்வுப் பணியை ஆர்வத்துடன் நடத்தும் பொறுப்பும் திறனும் தொண்டு நிறுவனங்களுக்கே மிகுதி.அவை ஆற்றவேண்டிய வழிமுறைகள் பற்பல.அவற்றைப்பற்றிய விவரமான பட்டியல் வருமாறு. 
* பொது அரங்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டிகள், கூட்டங்கள் நடத்துதல்
* பட்டிமன்றம்  
*  கட்டுரைப் போட்டி  
* பேச்சுப் போட்டி  
*  கலை விழா
*  நாடகம் நடத்தல் 
 * வாசகம் எழுதிடல் போட்டி  
*  கவிதைப் போட்டி
*  பாடல் போட்டி  
*  விநாடி வினா போட்டி 
*  விளையாட்டுப் போட்டி
*  கண்காட்சி அமைத்து நடத்திடல் 
 *  சிறப்பு பயிற்சி
*  படக்காட்சி அமைத்து நடத்திடல் 
*   சுற்றுலா
*  செயலரங்கு, பணிமனைகள், பட்டறைகள்
*  கருத்தரங்கம் பயிற்சிகள் அமைத்து நடத்திடல்
*  செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தல்
* முக்கிய இடங்களில் கருத்து விளக்கத்துடன் கூடிய சுவர் தட்டி வைத்தல்
*  கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திடல்
*குறிப்பிட்ட நாளைச் சிறப்பிக்கும் வகையில் களப்பணிகளை மேற்கொள்ளுதல்
*உள்ளூர் கேபிள் டி.வி.க்களில் விளம்பரம் செய்திடல் / படக்காட்சி ஒளிபரப்புதல்
*  பேனர்களை முக்கிய இடங்களில் கட்டி விளம்பரப் படுத்துதல்
* சைக்கிள் பயணம் மருத்துவ முகாம் நடத்திடல்
*  ஆட்டோ / வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி விளம்பரப்படுத்திடல்
* முன்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுதல் 
 * உறுதிமொழி ஏற்பு
* வீடியோ படக்காட்சி கருத்துள்ள திரைப்படம் காண்பித்தல் (16MM/ 35MM)
* வானொலி மூலம் தகவல் ஒலிபரப்பிட ஏற்பாடு செய்தல்
*  வீடுதோறும் ஸ்டிக்கர் ஒட்டுதல் 
*  தெருமுனைப் பிரச்சாரம் செய்தல்
*  சுயஉதவிக் குழு / இளைஞர்மன்றக் கூட்டங்களில் கருத்துப் பகிர்வு
* அனுபவம் பகிர்தல் / உண்மைச் சம்பவம் பகிர்தல்
* சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கௌரவித்தல்
* வளர்ச்சித் துறை / சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்தாளருடன் உரையாடல் அல்லது கேள்வி பதில் மூலமாகப் பங்கேற்பாளர்கள் கருத்து தெளிவுபெற வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திடல்
*தொலைக்காட்சி / வானொலி மூலம் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி / ஒலிபரப்பிடக் கேட்டுக்கொள்ளுதல்
* அழைப்பிதழ் அச்சடித்தல் 
*உள்ளூர், பஞ்சாயத்து, வட்டார, ஒன்றிய, மாநில அளவிலான செயல்பாடுகளை அமைத்து நடத்திடல்
* துண்டு பிரசுரங்களை அச்சிட்டு, செய்தித்தாள்களுடன் இணைத்து வழங்கிடச் செய்திடல்
* சிறப்புக் கட்டுரைகளை எழுதி, செய்தித்தாள், வார / மாத இதழ்களில் வெளிவர ஏற்பாடு செய்திடல்
* பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடத்தி விளக்குதல், பத்திரிகைகளில் செய்திகள் வெளிவர ஏற்பாடு செய்தல்
*  இலவசமாகப் பொருள்களை வழங்குதல்
*தேவை அடிப்படையில் சம்பந்தப்பட்ட செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தல்
*  பொருள்கள் விற்பனை முகாம் அமைத்து நடத்திடல்
* சமூகப் பணி செய்தல்  எ கல்வியறிவு அளித்தல்
*  அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருதல் / மேம்படுத்திடல்
*  நிறுவனங்களில் பணியாளர்களுக்குப் பயிற்சி தருதல்
*  உறுதிமொழி ஏற்பு  எ மனிதச் சங்கிலி  எ தெருமுனைப் பிரச்சாரம்
* வீதி நாடகம் / கலை நிகழ்ச்சிகள் / பொம்மலாட்டம்



விழிப்புணர்வின் தேவை

விழிப்புணர்வு 
விழிப்புணர்வு என்பது ஒரு புதிய சொல்லாக்கம். மக்கள் யாவருமே எப்போதும் உறங்கிக்கொண்டிருப்பதில்லை.விழித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் பொதுவான வாழ்க்கை ஓட்டத்தில் பல விஷயங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. அடிப்படையான, அத்தியாவசியமான பிரச்சினைகள் , தேவைகள்,பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கூட அவர்களுக்கு உரிய வகையில் கவனம் ஏற்படுத்தவேண்டி உள்ளது. அதையே விழிப்புணர்வு என்ற சொல்லால் நாம் குறிக்கிறோம்.
விழிப்புணர்வு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் , குறிப்பிட்ட நாட்களில் கொண்டாடி அந்தந்த விஷயங்களை நினைவூட்ட வேண்டியது மிக்க அவசியம்.விழிப்புணர்வின் தேவை

விழிப்புணர்வு நாட்கள் 

விழிப்புணர்வு நாள்களைக் கொண்டாடித்தான் தீரவேண்டுமா?அப்படிக் கொண்டாடுவதற்கான, அனுஷ்டிப்பதற்கான காரணங்கள் என்னென்ன? வரியாக அவற்றைக்காண்போம்
1) குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கருத்துக்களைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.,
2) துறைப் பணியாளர்களும் தொடர்புடைய நபர்களும் குழுவாக ஒருங்கிணைந்து மக்களின் நல்வாழ்வுக்காகச் சிறப்பு செயல்பாடுகளை மேற்கொள்வது.
3) மக்களின் கவனத்தை ஈர்க்கவும் அந்நாளில் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தூண்டுதல்,
4) பல்வேறு அமைப்புகளிடையே சமூக சிந்தனையை உருவாக்கி, சமூக செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவித்தல்.
5) மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தல்
6) மக்களிடையே அறிவியல் பூர்வமான கருத்துக்களை வழங்குவதன்மூலம் அறியாமையில் இருந்து விடுபடச் செய்தல்
7) ஒரே நாளில் அல்லது அந்த வாரத்தில், அந்த மாதத்தில் நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட கருத்தை / விஷயத்தை முன்வைத்து விழிப்புணர்வுப் பணி மற்றும் செயலாக்கப் பணிகளை மேற்கொள்ளல்
8) விழிப்புணர்வு நாளை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில், மக்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வகையில், செயல்படுத்துதல் / நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திடுதல்,
9) மக்களிடையே நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தல்
10) அறிவியல் சிந்தனையை வளர்த்தல்
11) தனிநபர், குடும்பம், சமுதாயம், நாடு என அனைத்து நிலையில் உள்ளவர்களும் நலமாய் வாழ, எதிர்கால வாழ்வைச் சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தல்  / வாழ்க்கைத் தரம் உயர்த்தல்
12) ஆண், பெண் இருபாலரையும் சமமாகப் பாவித்திடும் மனப்பான்மையை வளரச் செய்தல்
13) எதிர்வரும் ஆண்டில் செயல்படுத்தவேண்டிய முக்கியப் பணிகளைத் திட்ட டுமிட்டு, உத்வேகத்துடன் முறையாக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்திட தயாராகுதல்,
14) தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைக் களைந்து அதன் அடிப்படையில் இடர்ப் பாடுகளின்றி களச் செயல்பாடுகளை மேற்கொள்ளல் மேலும் தேவையான தகவல்களை / விவரங்களைப் பெற்று பயன்பெறுதல்,
15) மக்களிடையே காணப்படும் `நமக்குத் தொடர்பு இல்லாதது' என்ற மனப்பான்மை நீங்கி, `நாம் என்ன செய்யவேண்டும்?' என்ற மனப்பான்மையை வலுப்பெறச் செய்தல்
16) ஒவ்வொருவரும் தன்னை அறியவும் / தொழிலில் மேன்மையடையவும் / தன் ஆற்றலைப் பயன்படுத்தவும் / தன் ஆற்றலைப் பயன்படுத்தவும் / தெளிவாகத் திட்டமிட்டு ஆக்கபூர்வமான பணிகளைத் தொடரவும் வழிகாட்டல்
17) மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் / அதனைப் பெறவும் / சமூகப் பாதுகாப்பு வழங்கவும் முயற்சி செய்தல்.
18) அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தல்
19) அறியாமையில் இருந்து விழித்தெழச் செய்யல்
20) நிலையான எதிர்காலத்துக்கேற்ப தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்

விழிப்புணர்வு நாளை சிறப்பிக்கும் வகையில் 
நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திடவேண்டிய நிறுவனங்கள்

விழிப்புணர்வின் தேவையை உணர்த்தவேண்டிய பொறுப்பு தனி நபர்களிடம் ஏற்படவேண்டும். மேலும் பொதுவாக நாட்டு மக்களிடம் விழிப்புணர்வுக்கருத்துக்களைக் கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உண்டு.
எந்த எந்தநிறுவனங்கள் அதற்குப் பொறுப்பேர்கவேண்டும்? 
ஒரு பார்வை.
*மத்திய / மாநில அரசுகளின் வளர்ச்சித்துறை நிறுவனங்கள்
* அரசு சார்ந்த நிறுவனங்கள்
* தன்னாட்சி நிறுவனங்கள்
* தனியார் நிறுவனங்கள்  
 *பொது நிறுவனங்கள்
*சமூக சேவை அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் / தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புகள்
* சமுதாயம் சார்ந்த அமைப்புகள் தனிநபர்கள்

விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சிகளை அமைத்து யார் யார் நடத்தலாம்?
* பஞ்சாயத்து அமைப்புகள்  
*நேரு யுவக் கேந்திரா
* சுய உதவிக் குழு  
 * மகளிர் மன்றம்
*கிராம மேம்பாட்டுக் குழு  
 * பணிக்குழு
* வளர் இளம்பருவத்தினர் குழு
 *அண்டை வீட்டார் குழு
* திரைப்பட நடிகர் / நடிகை ரசிகர் மன்றங்கள்
* நாட்டு நலப் பணித் திட்டம்
 *என்.சி.சி.
* ஸ்கவுட்ஸ் / கெய்ட்ஸ் ரோட்டராக்ட் கிளப்
* இன்டராக்ட் கிளப்  
*செஞ்சிலுவை சங்கம்
* அறிவியல் கழகம்  
*தமிழ் வளர்ச்சி மன்றம்
*சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு  
*கிராம வளர்கல்விக் குழு
* பெற்றோர் / ஆசிரியர் சங்கம்
*தொழிற் சங்கம்
*அரசியல் சார்ந்த / அரசியல் சாராத அமைப்புகள்
* பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள்
*தொண்டு நிறுவனங்கள்
 * மக்கள் தொகை கல்விக் குழு
* கூட்டுறவுச் சங்கங்கள்  
*தொழிற்சாலைகள்
*வியாபாரிகள் / உற்பத்தியார்கள் சங்கம்
*மாவட்ட நலக் குழு
 * லயன்ஸ் கிளப்  
*ரோட்டரி கிளப்
*ஜேஸீஸ் கிளப்  
 * இன்னர் வீல் கிளப்
* செய்தித்தாள் / வார, மாத இதழ்கள், வெளியீட்டு நிறுவனங்கள்
* அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள்
* மாவட்ட கள விளம்பரத் துறை    எ நாடக நற்பணி மன்றம்
* ஆஸ்பத்திரி, மருத்துவர்கள் குழு
* சமுதாயம் சேர்ந்த அமைப்புகள்
*இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்
* அறக்கட்டளைகள்  
 * மாணவர் நல மன்றங்கள்